
வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன் மிகநல்ல வீணை தடவி மாசறு திங்கள்கங்கை முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால் ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழன் வெள்ளி சனிபாம்பு இரண்டும் உடனே ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே. என்பொடு கொம்பொடாமை இவைமார்பு இலங்க எருதேறி ஏழை உடனே பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தென் உளமே புகுந்த அதனால் ஒன்பது ஒன்றொடுஏழு பதினெட்டொடு ஆறும் உடனாய நாள்கள் அவைதாம் அன்பொடு நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே. உருவளர் பவளமேனி ஒளி நீறணிந்து உமையோடும் வெள்ளை விடைமேல் முருகலர் கொன்றைதிங்கள் முடிமேல் அணிந்தென்உளமே புகுந்த அதனால் திருமகள் கலையதூர்தி செயமாது பூமி திசை தெய்வமான பலவும்அருநெதி நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே. மதிநுதல் மங்கையோடு வடபால் இருந்துமறையோதும் எங்கள் பரமன் நதியொடு கொன்றைமாலை முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால் கொதியுறு காலன்அங்கி நமனோடு தூதர் கொடு நோய்களான பலவும் அதிகுணம் நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே நஞ்சணி கண்டன்எந்தை மடவாள் தனோடும்விடையேறு நங்கள் பரமன் துஞ்சிருள் வன்னிகொன்றை முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால் வெஞ்சின அவுணரோடு உருமிடியும் மின்னும் மிகையான பூதம் அவையும் அஞ்சிடு நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே வாள்வரிய தளதாடை வரி கோவணத்தர் மடவாள் தனோடு உடனாய் நாள்மலர் வன்னிகொன்றை நதிசூடி வந்தென் உளமே புகுந்த அதனால் கோளரி உழுவையோடு கொலையானை கேழல்கொடு நாகமோடு கரடி ஆளரி நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே செப்பிள முலைநல்மங்கை ஒரு பாகமாக விடையேறு செல்வன் அடைவார் ஒப்பிள மதியும்அப்பும் முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால் வெப்பொடு குளிரும்வாத மிகையான பித்தும் வினையான வந்து நலியா அப்படி நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே வேள்பட விழிசெய்துஅன்று விடைமேல் இருந்து மடவாள் தனோடும் உடனாய் வாள்மதி வன்னிகொன்றை மலர்சூடி வந்தென் உளமே புகுந்த அதனால் ஏழ்கடல் சூழ்இலங்கை அரையன் தனோடும் இடரான வந்து நலியா ஆழ்கடல் நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே பலபல வேடமாகும் பரனாரி பாகன் பசுவேறும் எங்கள் பரமன் சலமகளோடு எருக்கு முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால் மலர்மிசையோன் மால் மறையோடு தேவர் வரு காலமான பலவும் அலைகடல் மேருநல்ல அவைநல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே கொத்தலர் குழலியோடு விசையற்கு நல்கு குணமாய வேட விகிர்தன் மத்தமும் மதியும் நாகம் முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால் புத்தரோடு அமணைவாதில் அழிவிக்கும் அண்ணல் திருநீறு செம்மை திடமே அத்தகு நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே தேனமர் பொழில்கொள்ஆலை விளைசெந்நெல் துன்னி வளர்செம்பொன் எங்கும் நிகழ நான்முகன் ஆதியாய பிரமா புரத்து மறைஞான ஞான முனிவன் தானுறு கோளுநாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரைசெய் ஆனசொல் மாலையோதும் அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே!!
Generează voiceover-uri și melodii cu AI
Creează audio cu peste 300 de voci diferite din biblioteca noastră.

Bine ai venit la următoarea generație de creație muzicală cu Biblioteca noastră de Piese AI, unde inteligența artificială inovatoare se îmbină cu expresia creativă. Explorează o selecție vastă de piese AI generate de utilizatori, din diferite genuri, stări și limbi. De la peisaje sonore ambientale și cinematice la pop energic și piese profunde, rezonante, tehnologia noastră bazată pe AI aduce muzică unică, de înaltă calitate, perfectă pentru orice proiect sau bucurie personală.
Indiferent dacă ești creator de conținut, dezvoltator de jocuri, podcaster sau pur și simplu iubitor de muzică, biblioteca noastră de piese alimentată de AI îți oferă ceva pentru toată lumea. Fiecare piesă este realizată cu tehnologie AI avansată, garantând calitate sonoră realistă și o senzație naturală, cu opțiuni personalizabile pentru nevoile tale unice. De la coloane sonore de fundal la coloane sonore inspiratoare, descoperă versatilitatea și profunzimea muzicii AI pe platforma noastră.
Răsfoiește acum Biblioteca noastră de Piese AI pentru a explora muzica generată de utilizatori, creată cu tehnologie AI de ultimă generație. Găsește coloana sonoră perfectă pentru conținutul tău, ridică-ți proiectele cu peisaje sonore inovatoare și experimentează astăzi viitorul creației muzicale.