
மந்திரம் ஆவது நீறு; வானவர் மேலது நீறு; சுந்தரம் ஆவது நீறு; துதிக்கப்படுவது நீறு; தந்திரம் ஆவது நீறு; சமயத்தில் உள்ளது நீறு; செந்துவர்வாய் உமை பங்கன் திரு ஆலவாயான் திருநீறே. வேதத்தில் உள்ளது நீறு; வெந்துயர் தீர்ப்பது நீறு; போதம் தருவது நீறு; புன்மை தவிர்ப்பது நீறு; ஓதத் தகுவது நீறு; உண்மையில் உள்ளது நீறு; சீதப்புனல் வயல் சூழ்ந்த திரு ஆலவாயான் திருநீறே. முத்தி தருவது நீறு; முனிவர் அணிவது நீறு; சத்தியம் ஆவது நீறு; தக்கோர் புகழ்வது நீறு; பத்தி தருவது நீறு; பரவ இனியது நீறு; சித்தி தருவது நீறு; திரு ஆலவாயான் திருநீறே. காண இனியது நீறு; கவினைத் தருவது நீறு; பேணி அணிபவர்க்கு எல்லாம் பெருமை கொடுப்பது நீறு; மாணம் தகைவது நீறு; மதியைத் தருவது நீறு; சேணம் தருவது நீறு; திரு ஆலவாயான் திருநீறே. பூச இனியது நீறு; புண்ணியம் ஆவது நீறு; பேச இனியது நீறு; பெருந் தவத்தோர்களுக்கு எல்லாம் ஆசை கெடுப்பது நீறு; அந்தம் அது ஆவது நீறு; தேசம் புகழ்வது நீறு; திரு ஆலவாயான் திருநீறே. அருத்தம் அது ஆவது நீறு; அவலம் அறுப்பது நீறு; வருத்தம் தணிப்பது நீறு; வானம் அளிப்பது நீறு; பொருத்தம் அது ஆவது நீறு; புண்ணியர் பூசும் வெண் நீறு; திருத் தகு மாளிகை சூழ்ந்த திரு ஆலவாயான் திருநீறே. எயில் அது அட்டது நீறு; இருமைக்கும் உள்ளது நீறு; பயிலப்படுவது நீறு; பாக்கியம் ஆவது நீறு; துயிலைத் தடுப்பது நீறு; சுத்தம் அது ஆவது நீறு; அயிலைப் பொலிதரு சூலத்து ஆலவாயான் திருநீறே. இராவணன் மேலது நீறு; எண்ணத் தகுவது நீறு; பராவணம் ஆவது நீறு; பாவம் அறுப்பது நீறு; தராவணம் ஆவது நீறு; தத்துவம் ஆவது நீறு; அரா அணங்கும் திருமேனி ஆலவாயான் திருநீறே. மாலொடு அயன் அறியாத வண்ணமும் உள்ளது நீறு; மேல் உறை தேவர்கள் தங்கள் மெய்யது வெண்பொடி நீறு; ஏல உடம்பு இடர் தீர்க்கும் இன்பம் தருவது நீறு; ஆலம் அது உண்ட மிடற்று எம் ஆலவாயான் திருநீறே. குண்டிகைக் கையர்களோடு சாக்கியர் கூட்டமும் கூட, கண் திகைப்பிப்பது நீறு; கருத இனியது நீறு; எண்திசைப்பட்ட பொருளார் ஏத்தும் தகையது நீறு; அண்டத்தவர் பணிந்து ஏத்தும் ஆலவாயான் திருநீறே. ஆற்றல் அடல் விடை ஏறும் ஆலவாயான் திருநீற்றைப் போற்றி, புகலி நிலாவும் பூசுரன் ஞானசம்பந்தன், தேற்றி, தென்னன் உடல் உற்ற தீப்பிணி ஆயின தீரச் சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே.
用 AI 生成配音和歌曲
使用我们库中超过 300 种不同声音创建音频。
欢迎来到音乐创作的下一代--我们的 AI 歌曲库,在这里创新的人工智能与创意表达相结合。探索跨流派、情绪和语言的海量用户生成 AI 歌曲。从氛围和电影配乐到轻快流行和深沉共鸣的曲目,我们的 AI 驱动技术呈现独特的高品质音乐,完美适用于任何项目或个人欣赏。
无论您是内容创作者、游戏开发者、播客主持人,亦或只是音乐爱好者,我们的 AI 驱动歌曲库都能满足每个人的需求。每首曲目均采用先进的 AI 技术制作,确保逼真的音质和自然的听感,并提供可定制选项以匹配您的独特需求。从背景配乐到激励人心的原声,探索我们平台上 AI 音乐的多样性与深度。
立即浏览我们的 AI 歌曲库,探索由前沿 AI 技术打造的用户生成音乐。为您的内容找到完美配乐,用创新音景提升项目,并亲身体验音乐创作的未来。